Home சினிமா காந்தா படத்தின் இறுதி வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

காந்தா படத்தின் இறுதி வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

0

துல்கர் சல்மான் நடிப்பில் ஒரு படம் வெளியாகிறது என்றால், கண்டிப்பாக அப்படம் மக்களை முழுமையாக திருப்திப்படுத்தும் என்கிற நம்பிக்கை திரையுலகில் உள்ளது.

அந்த எதிர்பார்ப்புடன் கடந்த 14ஆம் தேதி வெளிவந்த படம்தான் காந்தா. தமிழ் சினிமாவின் 1950களின் காலகட்டத்தை மையப்படுத்தி உருவான இப்படத்தை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கியிருந்தார்.

ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு ரிலீஸான இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் பாக்ஸ் ஆபிஸில் சரிவை சந்தித்தது.

Wicked: For Good திரை விமர்சனம்

இறுதி வசூல் 

10 நாட்களை இதுவரை கடந்திருக்கும் காந்தா படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 38 கோடி வசூல் செய்துள்ளது. இதுவே இப்படத்தின் இறுதி வசூலாக இருக்கும் என கூறப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version