Home முக்கியச் செய்திகள் உலகளவில் மீண்டும் முடங்கிய மைக்ரோசாப்ட்: பயனர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

உலகளவில் மீண்டும் முடங்கிய மைக்ரோசாப்ட்: பயனர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

0

பில்கேட்ஸின் (Bill Gates) மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பல்வேறு அம்சங்களின் ஒரு தொகுப்பாக செயற்படும் மைக்ரோசாப்ட் 365 (Microsoft 365) செயலிழந்துள்ளது.

குறித்த செயலியானது, இன்றையதினம் உலகம் முழுவதும் பரவலான செயலிழப்பை சந்தித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பயனர்கள் அத்தியாவசிய மற்றும் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மைக்ரோசாப்ட் கிரவுட்ஸ்டிரைக்

இதேவேளை, கடந்த இரு மாதங்களுக்க முன்னதாகவும் மைக்ரோசாப்ட்டின் கிரவுட்ஸ்டிரைக் (Microsoft CrowdStrike) செயலியில் கோளாறு ஏற்பட்டது.

இதன் போது, உலகம் முழுவதிலுமுள்ள தொழிநுட்ப நிறுவனங்கள் பல மணி நேரங்களுக்கு முடங்கின.

அந்த சம்பவம் இடம்பெற்று இரு மாத காலங்கள் கடந்துள்ள நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மீண்டும் அதே போன்ற ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version