வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டமை அரசியல் பழிவாங்கல் என்பதோடு அரசில் கொலையாகவே நாம் நோக்குகிறோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளை அங்கீகாரம் மற்றும்
மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான விதிகள் (அத்தியாயம் 52) – அங்கீகாரம் தொடர்பான விவாதத்தில் இன்று (22.10.2025) உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,
“பொதுப் பாதுகாப்பின் ஓட்டைகளே கொலைக்கு பிரதான காரணமாகும். இதற்கு அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும். ஜனநாயக ரீதியில் ஒரு கட்சியில் போட்டியிட்டு 65 வீதம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
ஒவ்வொரு இடத்திலும் கொலைகள்
அவர், தலைவர் நாற்காலியில் உட்கார விடாமல் அரசாங்கமே பல முட்டுக்கட்டைகளை போட்டது.
இது 101ஆவது துப்பாக்கிச்சூட்டு சம்பவமாகும். இவற்றில் 52 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வாக்களிக்க சென்றவர்களை கொலைச் செய்த அரசாங்கத்துடன் நாம் இருக்கிறோம். அரசியல் கட்சி ஒன்றை தேர்ந்தெடுத்ததற்காக, அந்த கட்சியின் பிரதேச சபையின் தலைவரானதற்காக கொலை செய்த அரசாங்கம் இன்றிருக்கிறது.
கீர்த்தி அபேவிக்கிரம, லயனல் ஜயதிலக்க, ஜீ.வி.எஸ்.சில்வா மற்றும் விஜேகுமாரதுங்க ஆகியோர் அரசியலுக்கு வந்ததற்காக கொல்லப்பட்டனர். எங்கேயும் பாதுகாப்பு இல்லை. ஒவ்வொரு இடத்திலும் கொலைகள். அரசு அதற்கு வேறு காரணங்கள் கூற முடியாது. பொறுப்புக் கூறுவது அவர்களின் பொறுப்பாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
