Home இலங்கை குற்றம் நள்ளிரவு வேளையில் திருமலையில் பதற்றம்! இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிப்பு

நள்ளிரவு வேளையில் திருமலையில் பதற்றம்! இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிப்பு

0

திருகோணமலையில் கடற்கரையோரமாக சட்டவிரோதமாக புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதால் அந்த இடத்திலே பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றது.

 குறித்த பகுதியில் கட்டிடம் அமைக்க நீதிமன்றம் தடை இல்லை எனவும் அத்தோடு கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என கருதி பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்தோடு, குறித்த பகுதியில் முன்னைய காலத்தில் பௌத்தர்களுக்கான அறநெறி பாடசாலை காணப்பட்டதாகவும் பின்னர் சுனாமி ஏற்பட்ட பின்னர் அது அழிந்து போய் விட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையிலே குறித்த இடம் பௌத்தர்களுக்கே சொந்தம் என தெரிவிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருகோணமலை மற்றும் வடக்கு, கிழக்கு பகுதிகளில்  புத்த விகாரை அமைப்பதற்கு அரசாங்கம் மறைமுகமாக அனுமதி வழங்கி இருக்கின்றதா என்கின்ற சந்தேகம் எழுகின்றது.

இந்தநிலையிலே, குறித்த விவகாரம் குறித்து அரசாங்கம் தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்துமா அல்லது கடந்து செல்லப் போகின்றதா. மேலும், அந்த இடத்திலே பௌத்த விகாரை அமைக்கின்ற பல காணொளிகள் தற்போது வெளியாகி உள்ளன.

அத்தோடு,ஏன் திருகோணமலையை இவ்வளவு விரைவாக இலக்கு வைக்கிறீர்கள் என எல்லோரும் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும், இது தொடர்பான பல விடயங்களை விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,

NO COMMENTS

Exit mobile version