கொழும்பு காலி முகத்திடல் கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது நீரோட்டத்தில்
அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்ட இரண்டு இளைஞர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று(16) பிற்பகல் போர்ட் சிட்டி என்ற துறைமுக நகரப் பகுதியில் இருவரும்
நீராடிக்கொண்டிருந்தபோது அலையால் இழுத்துச் செல்லப்பட்டனர்.
உயிரிழப்பு
எனினும் அங்கிருந்த படகு ஒன்றின் உதவியுடன் இருவரும் மீட்கப்பட்டு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், அவர்களில் ஒருவர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இருவரும் மஹரகமவில் பணிபுரிபவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
அத்துடன் நுவரெலியா பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
