பௌத்த விகாரைகளில் பணிக்கமர்த்தப்பட்டிருந்த இராணுவத்தினரை அங்கிருந்து நீக்கியது தவறான நடவடிக்கையாகும் என்று பொதுஜன பெரமுண கட்சியின் செயலாளர் சாகர காரியவசம்(Sagara Kariyawasam) விமர்சித்துள்ளார்.
திங்கட்கிழமை(30) மாலை பத்தரமுல்லையில் உள்ள பொதுஜன பெரமுண கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
விகாரைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ள இராணுவத்தினர்
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
விகாரைகளில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த இராணுவத்தினரை தற்போதைய அரசாங்கம் நீக்கியுள்ளது.
இராணுவத்தினர் விகாரைகளின் நிர்மாணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தே இராணுவத்தினர் விகாரைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
விகாரைகளில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டமை இராணுவத்தினரின் சுயவிருப்பின் பேரில் நடைபெற்ற விடயமாகும்.
அதற்காக இராணுவத்தினரை ஏன் நீக்க வேண்டும்? எவரை திருப்திப்படுத்துவதற்காக அரசாங்கம் இவ்வாறு செயற்படுகிறது? என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.