Home இலங்கை பொருளாதாரம் குறைவடைந்தது மில்கோ பால்மா விலை

குறைவடைந்தது மில்கோ பால்மா விலை

0

அரசாங்கத்திற்கு சொந்தமான மில்கோ நிறுவனத்தின் கீழ் விநியோகிக்கப்படும் 400 கிராம் ஹைலண்ட் பால் மாவின் விலையை அடுத்த வாரம் முதல் 75 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர(mahinda amaraweera) தெரிவித்துள்ளார்

ஏனைய பால்மாக்களின் விலை

மில்கோ நிறுவனம் இன்று(10) முதல் இந்த குறைக்கப்பட்ட பால் மாவை சந்தைக்கு வெளியிட்ட போதிலும் சந்தையில் தற்போதுள்ள கையிருப்பு அதே விலையில் உள்ளதால் அடுத்த வாரம் முதல் இந்த விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சந்தையில் தற்போது 1125 ரூபாவாக விற்பனை செய்யப்படும் ஹைலேண்ட் பால் பொதி ஒன்றின் விலை 1050 ரூபாவாகவும், 1 கிலோ ஹைலேண்ட் பால் மாவின் விலையை 190 ரூபாவாலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். 

இதேவேளை ஏனைய பால்மாக்களின் விலை குறைவு தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

Source: https://ibctamil.com/article/milk-powder-price-down-1725946283

NO COMMENTS

Exit mobile version