Home இலங்கை குற்றம் கிளிநொச்சியில் வீடு மீது தாக்குதல் : பல இலட்சம் சொத்துக்கள் நாசம்…!

கிளிநொச்சியில் வீடு மீது தாக்குதல் : பல இலட்சம் சொத்துக்கள் நாசம்…!

0

கிளிநொச்சி (Kilinochchi) – பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்கு உட்பட்ட முகமாலை
பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களினால் தனிமையில் வாழ்ந்து வந்த பெண் ஒருவரது வீடு அடித்து நொருக்கப்பட்டு தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (22.06.2024) இரவு 10 மணியளவில் இடம்பெற்று்ளளது.

விசாரணைகள்

வீட்டில் தாயும் மகளும் வாழ்ந்து வந்த நிலையில் மகள் பல்கலைக்கழகம்
ஒன்றில் கல்வி கற்பதற்காக சென்றிருந்த நிலையில் தாயார் அருகில் உள்ள வீடு
ஒன்றில் இரவுவேளைகளில் பாதுகாப்பு கருதி உறங்குவது வழமையாக இருந்துள்ளது.

இந்நிலையிலேயே நேற்று முன்தினம் குறித்த வீடு அடித்து நொருக்கப்பட்டு வீட்டின் சில
பகுதிகள் தீக்கிரையாக்கப்பட்டு பெறுமதியான சொத்துக்களுக்கும் சேதம்
விளைவிக்கப்பட்டுள்ளன. தாக்குதலுக்கு உள்ளான வீட்டின் உரிமையாளர் ராதா
அழகேஸ்வரி என்பவராவார்.

இதேவேளை, நேற்று முன்தினம் தாக்குதலுக்கு உள்ளானவரது மகனது வீடும் கடந்த வருடம்
தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. 

இது தொடர்பான விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/attack-house-mukhamalai-lakhs-worth-property-1719195782

NO COMMENTS

Exit mobile version