Home இலங்கை சமூகம் அறுகம் குடா இஸ்ரேலியர்கள் தாக்குதலுக்கு கைமாறியுள்ள பல லட்சம் டொலர்கள்!

அறுகம் குடா இஸ்ரேலியர்கள் தாக்குதலுக்கு கைமாறியுள்ள பல லட்சம் டொலர்கள்!

0

அறுகம் குடாவில் (Arugam Bay) இஸ்ரேலியர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த இரண்டு லட்சம் டொலர்கள் கைமாற்றப்பட்டுள்ளதாக புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூன்று பேரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் குறித்த விடயங்கள் தெரியவந்துள்ளன.

கைது செய்யப்பட்ட குழுவின் தலைவராக ஒரு முஸ்லிம் நபர் செயற்பட்டதாகவும் அவரது தந்தை மாலைத்தீவை சேர்ந்தவர் என்றும் தாய் இலங்கையை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

நோக்கம்

இந்த நிலையில், அறுகம் குடாவில் உள்ள யூத மத மையத்தைத் தாக்குவதே இவர்களது நோக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.

அத்தோடு, இந்த தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்டவர் அடிக்கடி ஈராக்கிற்கு சென்று வருபவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பல மாதங்களாக நாட்டின் புலனாய்வு அமைப்புகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் இந்த தாக்குதல் திட்டத்தை தடுக்க முடிந்ததாக குறிப்பிடப்படுகிறது. 

Source: https://ibctamil.com/article/millions-of-dollars-attacking-israelis-arugam-bay-1730012562

NO COMMENTS

Exit mobile version