மன்னார் மாவட்டத்தில் புதிதாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை
மின் உற்பத்தி திட்டத்திற்கு பல்வேறு தரப்புக்களினால் எதிர்ப்பு
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று (28) இடம்பெற்றபோதே இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், மன்னாரில் கனிய மணல் அகழ்வு முன்னெடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும்
செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
எதிர்ப்பு
பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கனிய மணல் அகழ்வுக்கு
முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் குறித்து எதிர்ப்பு தெரிவித்ததோடு,இதனால் மன்னார் தீவில் ஏற்படப்போகும் அபாய நிலை குறித்தும் தெரியப்படுத்தி கனிய மணல் அகழ்வுக்கு தமது எதிர்ப்பையும்
தெரிவித்தனர்.
இதேவேளை இன்றைய தினம் இடம் பெற்ற மன்னார் மாவட்ட
அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கனிய மணல் அகழ்வு குறித்து முடிவு
எடுக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட போதும் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.
மேலும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்தும்
கலந்துரையாடப்பட்டது.
குறித்த கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான றிசாட்
பதியுதீன், காதர் மஸ்தான், ரவிகரன், முத்து முஹம்மட், ஜெகதீஸ்வரன் ஆகியோர்
கலந்து கொண்டனர்.
