Home இலங்கை அரசியல் எத்தடை வரினும் யாழ். மாவட்டத்துக்குரிய அபிவிருத்தி தொடரும்: அமைச்சர் உறுதி

எத்தடை வரினும் யாழ். மாவட்டத்துக்குரிய அபிவிருத்தி தொடரும்: அமைச்சர் உறுதி

0

எந்தத் தடை வந்தாலும் யாழ். மாவட்டத்துக்குரிய அபிவிருத்தி திட்டங்கள் தொடரும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்படவிருந்த இக்கூட்டத்தில் சிவன்
பூஜையில் கரடி புகுந்ததுபோல சம்பவங்களும் இடம்பெற்றன.

தொல்லை தாங்க முடியாமல் எம்.பியொருவர் வெளியேறி சென்றுள்ளார். மேலும் சில
அதிகாரிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

அபிவிருத்தி திட்டங்கள் தொடரும்

எவருடைய பேச்சுக்கும் கட்டுப்படாத நபரொருவரால் தான் இப்படி நடந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மோசமாக நடந்துகொண்டார்.

தனக்குள்ள தனிப்பட்ட
பிரச்சினை காரணமாக சம்பந்தமில்லாத விடயங்களைக்கூட அவர் குறிப்பிட்டுள்ளார்.

எத்தடை வரினும் யாழ். மாவட்டத்துக்குரிய அபிவிருத்தி திட்டங்கள் தொடரும்.

அவை
உரிய வகையில் முன்னெடுக்கப்படும். ஒருங்கிணைப்புக்குழு தலைவருக்குள்ள அதிகாரம்
இனி முழுமையாக பயன்படுத்தப்படும்.

சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வரும். நாம் இது பற்றி மக்களிடமே
முறையிடுகின்றோம். அவர்கள் பார்த்தக்கொள்வார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version