Home இலங்கை அரசியல் தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்த சென்ற அமைச்சரை வழிமறித்த முன்னணியினர்

தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்த சென்ற அமைச்சரை வழிமறித்த முன்னணியினர்

0

தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த சென்ற கடற்தொழில் அமைச்சரை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தடுத்து நிறுத்திய சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் இன்றைய தினம் மாலை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்த சென்று இருந்தனர்.

கண்டனங்கள் 

அதன் போது, அங்கிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அமைச்சரை அஞ்சலி செலுத்த அனுமதிக்க மாட்டோம் என தடுத்து நிறுத்தி முரண்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில் , தியாக தீபத்தின் தியாகத்தை மதித்து , அஞ்சலி செலுத்த வந்த அமைச்சரை தடுத்து நிறுத்தியமை கண்டிக்கத்தக்கது என பல தரப்பினரும் தமது கண்டனங்களை சமூக வலைத்தளங்களில்
பதிவிட்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version