தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கமத்தொழில் அமைச்சர் லால்காந்தவுக்கு இஸ்ரேலுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இஸ்ரேலியத் தூதுவர் ரூவென் அஸார் அண்மையில் அமைச்சர் லால்காந்தவுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.
முக்கிய சந்திப்பு
இதன்போது இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்குப் பொருத்தமான விவசாய முறையொன்றைப் பற்றி அறிந்து கொள்ளும் நோக்கில் இஸ்ரேலில் ஆய்வொன்றை மேற்கொள்வதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் லால்காந்தவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன் பிரகாரம் இந்த வருட இறுதிக்குள் அமைச்சர் லால்காந்த மற்றும் கமத்தொழில் அமைச்சின் அதிகாரிகள் உள்ளடங்கிய தூதுக்குழு ஒன்று இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
