Home இலங்கை சமூகம் வவுனியாவிற்கு விஜயம் செய்த மகளிர் விவகார அமைச்சர்

வவுனியாவிற்கு விஜயம் செய்த மகளிர் விவகார அமைச்சர்

0

மகளிர் விவகார அமைச்சர் சரோஜினி போல்ராஜ் வவுனியாவிற்கு விஜயத்தை
மேற்கொண்டிருந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியின் மகளிர் அணியினருடனான
சந்திப்பொன்றினை மேற்கொண்டுள்ளார். 

குறித்த சந்திப்பானது வவுனியாவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று இடம்பெற்றுள்ளது. 

கோரிக்கைகள் 

இதன்போது, அமைச்சரிடம் வவுனியா மாவட்டத்தில் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள்
தொடர்பாக பெண்களினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. 

அத்துடன், கோரிக்கை
கடிதங்களும் கைகயளிககப்பட்டிருந்தன.

இதேவேளை, பிரதேச பெண்கள் வலையமைப்பினர் ஊடாக அமைச்சர் பொன்னாடை போர்த்தி
கெளரவிக்கப்பட்டிருந்தார்.

குறித்த சந்திப்பில் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பிரதி
அமைச்சருமான உபாலி சமரசிங்க, தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள், பொது
அமைப்புக்களை சேர்ந்த பெண்கள் என பலரும் கலந்து கொண்டிருத்தனர்.

NO COMMENTS

Exit mobile version