பதுளை-மொனராகலை மாவட்டங்களின் எல்லைக் கிராமமொன்றுக்கான மின்வழங்கல் திட்டம், அமைச்சர் சமந்த வித்தியாரத்னவின் அடாவடி காரணமாக சீர்குலையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டத்தின் அன்னாசிகல கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசிக்கின்றனர்.
பலதடவைகள் கோரிக்கை விடுப்பு
மிகப் பெரும் சிரமங்களுடன், கடின உழைப்பின் மூலம் விவசாயம் செய்து வரும் மக்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர்.
குறித்த கிராமத்துக்கான மின்வசதியை ஏற்படுத்தித் தருமாறு முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிரிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச காலங்களில் எல்லாம் கிராம மக்கள் பல்வேறு அரசியல்வாதிகளிடம் பலதடவைகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும் பலன் கிட்டவில்லை.