வேளாண்மை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் நாமல் கருணாரத்ன, தான் காட்டு யானையிடம் சிக்கியதாக தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் குருணாகல் அம்பன்பொல பகுதியில் இரவு நேரத்தில் நடந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யானைக்கு வழிவிட்ட பிறகு வாகனத்தை தொடர்ந்து செலுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
தீர்வுகள்
தனது வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த சம்பவம் நடந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
காட்டு யானைகளின் பிரச்சினை சமீபத்தில் மோசமடைந்துள்ளதாகவும், குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வுகள் காணப்பட வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
