Home இலங்கை அரசியல் கடமைகளைப் பொறுப்பேற்றார் விஜித ஹேரத் : வழங்கப்பட்டுள்ள புதிய நியமனங்கள்

கடமைகளைப் பொறுப்பேற்றார் விஜித ஹேரத் : வழங்கப்பட்டுள்ள புதிய நியமனங்கள்

0

இலங்கையின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) இன்று (25) தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

ஜனாதிபதியால் நேற்று (24) வெளிவிவகார, பொது பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு, பௌத்த விவகார அமைச்சராக விஜித ஹேரத் நியமிக்கப்பட்டார்.

அத்தோடு, ஊடக, சமூக பாதுகாப்பு, சிவில் விமானப் போக்குவரத்து, ஊடகத்துறை போக்குவரத்து அமைச்சுகளும் விஜித ஹேரத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 

நியமனங்களை வழங்கினார்

இதேவேளை புதிய ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தினால் இன்று சில நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் (SLRC) புதிய தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளரும் பிரபல திரைப்பட இயக்குநருமான கலாநிதி செனேஷ் திஸாநாயக்க பண்டார (Senesh Dissanayake Bandara) நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் (SLBC) புதிய தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி உதித கயாஷன் (Uditha Gayashan) நியமிக்கப்பட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version