சட்டத்தின் மூலம் மட்டுமே நாங்கள் ஊழல்களுக்கு எதிராக
நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர(Arun Hemachandra) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு(Batticaloa) போதனா வைத்தியசாலையில் விசேட கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் பழிவாங்கல்
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
எமது அரசாங்கம் எந்த அரசியல் பழிவாங்கலையும் முன்னெடுக்காது.
ஊழல்களை மேற்கொண்டவர்களுக்கு எதிராக இலங்கையின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.
இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.பிரபு, வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் மைதிலி, பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர், வைத்தியசாலையின் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.
தற்போதைய நிலைமை
இதன்போது, வைத்தியசாலையின் தற்போதைய நிலைமை, வைத்தியசாலையின்
தேவைப்பாடுகள், வைத்தியசாலையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றினை
தீர்ப்பதற்கான வழிவகைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படவேண்டிய அபிவிருத்தி திட்டங்கள்
குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன் வைத்தியசாலைக்கு மிக தேவைப்பாடான விடயங்களை
பெற்றுக்கொடுப்பது குறித்து இதன்போது பேசப்பட்டுள்ளது.
கலந்துரையாடல்களைத் தொடர்ந்து வைத்தியசாலையின் அனைத்துப் பகுதிக்கும் சென்று
பார்வையிட்ட பிரதியமைச்சர் குழுவினர் வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.