Home இலங்கை அரசியல் அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் 41 பேர் தமது உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான நீர்க்கட்டணங்களை இன்னும் செலுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை (National Water Supply and Drainage Board) தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், இவ்வாறு அறவிடப்படாது நிலுவையில் உள்ள தொகை ஒன்பது மில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட நடவடிக்கை

பொதுவிதிகளுக்கு அமைய குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சபை குறிப்பிட்டுள்ளது.

மேலும், எவ்வித விசேட சலுகைகளும் இன்றி சுற்றறிக்கைகளுக்கு அமைய அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/ministers-and-mp-who-do-not-pay-water-dues-1728908596

NO COMMENTS

Exit mobile version