Home இலங்கை அரசியல் கம்மன்பிலவை கைது செய்ய அநுரவிடம் கெஞ்சும் அமைச்சர்கள்! சிறைக்கு செல்ல ஆயத்தம்

கம்மன்பிலவை கைது செய்ய அநுரவிடம் கெஞ்சும் அமைச்சர்கள்! சிறைக்கு செல்ல ஆயத்தம்

0

இலங்கையில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு தற்போது கைது செய்யப்படும் தொற்று நோய் தொற்றிக் கொண்டுள்ளது.

நாங்கள் கைது செய்யப்படலாம், நாங்கள் கைது செய்யப்படப் போகின்றோம், இந்த அரசாங்கம் எங்களை பழிவாங்குகின்றது என்று ஆளாளுக்கு கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார் நான் கைது செய்யப்பட போகின்றேன் என்று… பின்னால் விமல் வீரவன்ச கூறினார் நான் கைது செய்யப்பட போகின்றேன் என்று உதய கம்மன்பிலவும் மாதத்திற்கு ஒரு முறை இந்த அரசாங்கத்தால் கைது செய்யப்பட போகின்றேன், என்னை பழிவாங்க இந்த அரசாங்கம் காத்திருக்கின்றது என்று கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றார்.

இப்படி இருக்க, ஊடகவியலார் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த உதய கம்மன்பில தான் எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதிக்கு முன்னர் கைது செய்யப்படப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அநுர அரசாங்கத்தில் பரபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த கைதுகள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இப்படிக்கு அரசியல் நிகழ்ச்சி, 

NO COMMENTS

Exit mobile version