Home முக்கியச் செய்திகள் இரண்டு நாடுகளிடம் கப்பம் கோரிய முன்னாள் அமைச்சர்கள் : இலங்கைக்கு ஏற்பட்ட பேரிழப்பு

இரண்டு நாடுகளிடம் கப்பம் கோரிய முன்னாள் அமைச்சர்கள் : இலங்கைக்கு ஏற்பட்ட பேரிழப்பு

0

கடந்த அரசாங்கங்களின் ஆட்சியின் போது நாட்டிற்கு வந்த தென் கொரிய (south korea)மற்றும் அவுஸ்திரேலிய (australia)முதலீட்டாளர்களிடம் முன்னாள் அமைச்சர்கள் கப்பம் கோரியதால், தமது முதலீடுகளை கைவிட்டதாக நாட்டிலுள்ள தென்கொரிய மற்றும் அவுஸ்திரேலிய தூதுவர்கள் வெளிவிவகார அமைச்சர் .விஜித ஹேரத்திடம் உத்தியோகபூர்வமாக முறையிட்டுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கப்பம் கோரியதால் இலங்கைக்கான முதலீடுகளை இந்தியா(india) மற்றும் வியட்நாமுக்கு(viyatnam) கொண்டு சென்றதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

அமைச்சர் விஜித ஹேரத்திடம் முறைப்பாடு

அண்மையில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை(vijitha herath) சந்தித்த தென்கொரிய தூதுவர் மியோன் லீ மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன் ஆகியோர் இந்த முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.

இங்கு, தென்கொரிய தூதுவர் மேலும் கூறுகையில், முத்துராஜவெலயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு குழாய் மூலம் எரிபொருளைக் கொண்டு செல்வதற்காக அழைக்கப்பட்ட திறந்த விண்ணப்பம் கோரலை, தனது நாட்டைச் சேர்ந்த முதலீட்டாளர் வென்றதாகவும், ஆனால் தெரியாத காரணத்தால், திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version