Home இலங்கை கல்வி சாதாரண தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

சாதாரண தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

0

கல்விப் பொதுத்தர சாதாரண தர தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அழைப்பு ஓக்டோபர் மாதம் 9ஆம் திகதி வியாழக்கிழமை நள்ளிரவு 12.00 மணிக்கு முடிவடையும் என்று கல்வி அமைச்சு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

குறித்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 18 முதல் இணையத்தில் மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதன்படி எதிர்வரும் ஒக்டோபர் 09 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப் பிறகு இணையத்தின் மூலமான விண்ணப்பகோரல்கள் நிறைவடையவுள்ளது.

விண்ணப்பத் திகதி 

மேலும் எவ்வித காரணத்திற்காகவும் குறித்த விண்ணப்பத் திகதி நீட்டிக்கப்படாது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்களை  அறிந்துக்கொள்ள பின்வரும் தொலைபேசி எண்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

0112784208 

0112784537

0112785922 

0112784422

NO COMMENTS

Exit mobile version