Home இலங்கை அரசியல் பெண்கள் விவகாரத்தில் சிக்கிய முக்கிய புள்ளி: வெளிவிவகார அமைச்சின் சிறப்பு பதவியில்..!

பெண்கள் விவகாரத்தில் சிக்கிய முக்கிய புள்ளி: வெளிவிவகார அமைச்சின் சிறப்பு பதவியில்..!

0

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தினுடைய தனிப்பட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள், முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

அவர், பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்று குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர குற்றம் சுமத்தினார். 

இதன்போது, தயாசிறி ஜெயசேகர, மோசமில்லாத அமைச்சர் விஜித ஹேரத், மோசமான ஒரு தனிப்பட்ட செயலாளரை அமர்த்தியிருப்பதானது அமைச்சகத்தில் இருக்கக் கூடிய பெண்களுக்கு கூட அச்சத்தை ஏற்படுத்துகின்ற ஒரு விடயம் என தெரிவித்தார். 

வெளிநாட்டு தொழில்முறைகள் மற்றும் ஒழுங்கான நடத்தைகளை கொண்டவர்களே அரசின் குறித்த பதவிக்கு, நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். 

இருப்பினும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இந்த விடயத்தில் தவறு விட்டிருப்பது ஏன் என கேள்விகள் எழுப்பப்படுகின்றன. 

தொடர் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள இந்த விடயம் தொடர்பில் முக்கிய விடயங்களை சுட்டிக்காட்டுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி, 

NO COMMENTS

Exit mobile version