Home இலங்கை அரசியல் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களை தற்போதைய நிலை தொடர்பில் மீளாய்வு

அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களை தற்போதைய நிலை தொடர்பில் மீளாய்வு

0

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்  அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுடன் அவற்றின் தற்போதைய நிலையை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல் அமைச்சு வளாகத்தில் நடைபெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது, நேற்றையதினம்(3) இடம்பெற்றுள்ளது.

தேசிய பொருளாதாரத்திற்கு மேலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதற்கு இந்த நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்துதல், திறமையான பொது சேவையின் மூலம் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுதல் மற்றும் வரவு செலவுத் திட்டங்கள் போன்ற விடயங்களை நிவர்த்தி செய்தல் ஆகியவை கலந்துரையாடலின் மையமாக இருந்தது.

 

கலந்துரையாடல்

இக் கலந்துரையாடலில் அமைச்சர் K. V சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், அமைச்சின் செயலாளர் மற்றும் பின்வரும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

1. தென்னை பயிர்ச்செய்கை சபை

2. தென்னை அபிவிருத்தி அதிகார சபை

3. தென்னை ஆராய்ச்சி மையம்

4. கப்ருகா நிதி

5. பனை அபிவிருத்தி சபை

6. கித்துள் அபிவிருத்திச் சபை

7. -இலங்கை முந்திரி கூட்டுத்தாபனம்

8. மசாலா மற்றும் அது சார்ந்த பொருட்கள் சந்தைப்படுத்தல் வாரியம்

NO COMMENTS

Exit mobile version