சித்தார்த் சித்தா என்ற மிகச்சிறந்த படத்தை தொடர்ந்து களத்தில் சந்திப்போம் ராஜசேகருடன் இணைந்து கொடுத்துள்ள மிஸ் யூ எப்படி என்பதை பார்ப்போம்.
கதைக்களம்
சித்தார்த் படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு அமைச்சர் மகன் மீது கேஸ் கொடுக்க, அமைச்சர் சித்தார்த்திடம் எவ்வளவு பேசியும் அவர் கேஸ்-யை வாபஸ் வாங்கவில்லை.
இதனால் சித்தார்தை கார் ஆக்சிடண்ட் ஆகி, கடந்த 2 வருடம் தன் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் மறக்கிறார். அந்த சமயத்தில் கருணாகரனை யதார்த்தமாக சந்தித்து அவருடன் நல்ல நட்பாகி பெங்களூர் செல்கிறார்.
அங்கு ஆசிகாவை பார்த்ததும் காதலிக்க, அந்த காதலை அவர் மறுக்கிறார். சரி பெற்றோர்களிடம் சொல்லி திருமணத்தை நடத்தலாம் என சித்தார்த் வீட்டிற்கு வர அங்கு தான் தெரிய வருகிறது ஆசிகா சித்தார்த்தின் மனைவி என்று, மனைவியையே மறந்த சித்தார்த் அடுத்து என்ன செய்வார் என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
சித்தார்த் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு Romcom கதையில் தோன்றியுள்ளார், அதிலும் தன் துறு துறு நடிப்பில் பல இடங்களில் ஸ்கோர் செய்கிறார், ஆனால், ஊர் பேர் தெரியாத கருணாகரனை சந்தித்து காபி வாங்கிகொடுத்து நட்பாக ஆகுவது எல்லாம் யதார்த்தம் தாண்டி ஹீரோயிசம் உலகிற்குள் செல்கிறார்.
ஆசிகா தமிழ் சினிமாவிற்கு நல்ல வரவேற்பு, கண்டிப்பாக இனி நிறைய படங்கள் குவியலாம், தன் கணவர் தன்னையே மறந்து தன்னிடமே காதலை சொல்கிறார் ஆனால் அவரிடம் தன்னை யார் என்று காட்டிக்கொள்ளாமல் நடிக்கும் இடத்திலும் சரி, நா எப்போ உங்களை வேண்டாம் என்று சொன்னேன் என கிளைமேக்ஸில் கேட்கும் இடம் வரை நல்ல நடிப்பை கொடுத்துள்ளார்.
கருணாகரன், பாலசரவணன், லொல்லு சபா மாறன் வரை டைம் கிடைக்கும் போதெல்லாம் ஒன் லைன் கவுண்டரில் கலக்குகின்றனர். ஆனால், படம் ஒரு சீரியஸ் பிரச்சனையில் ஆரம்பிக்கிறது.
அதை தொடர்ந்து ஒரு காதல் படமாக செல்கிறது, அந்த சீரியஸ் பிரச்சனை கிளைமேக்ஸில் மீண்டும் வந்து இவர்கள் காதல் சேர்ந்ததா என்பதை சீரியஸாக சொல்வது, இல்லை கலகலப்பாக சொல்வதா என்ற சில தடுமாற்றம் அங்கங்கே வருகிறது.
இந்த தடுமாற்றம் ரசிகர்களுக்கும் படத்தை சில இடங்களில் சீரியஸாக பார்க்க முடியவில்லை. அதிலும் சித்தார்த் திடீர் ஹீரோயிசம் செய்து 10 பேரை அடிப்பது எல்லாம் இது லவ் படமா இல்லை எதும் விஜய், அஜித் படமா என்ற எண்ணம் ஆடியன்ஸிடம் வந்து செல்வது தவிர்க்க முடியவில்லை.
ஒளிப்பதிவும் செம கலர்புல்லாக உள்ளது, பெங்களூர், சென்னை என அனைத்தும் அழகாய் காட்டியுள்ளனர், ஜிப்ரானின் பின்னணி இசை சூப்பர், பாடல்கள் ரொம்ப சுமார்.
க்ளாப்ஸ்
சித்தார்த், ஆசிகாவின் நடிப்பு மற்றும் காதல் காட்சிகள்.
ஒரு சில ஒன் லைன் காமெடி கவுண்டர் வசனங்கள்.
பல்ப்ஸ்
இன்னும் திரைக்கதையில் சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கலாம், ஏனெனில் அத்தகைய களம் இருந்தது.
பாடல்கள் படத்திற்கு வேகத்தடை, தேவையில்லாத இடத்தில் வந்து செல்கிறது.
மொத்தத்தில் கண்டிப்பாக மிஸ்ஸே செய்ய கூடாது மிஸ் என்று சொல்ல மனமில்லை என்றாலும், டைம் பாஸாக இந்த மிஸ் யூவை ஓரு முறை காணலாம்.