Home இலங்கை சமூகம் முல்லைத்தீவில் கடலில் மாயமான நபர் உயிரிழந்ததாக அறிவிப்பு

முல்லைத்தீவில் கடலில் மாயமான நபர் உயிரிழந்ததாக அறிவிப்பு

0

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தீர்த்தக்கரை பகுதியிலிருந்து கடந்த 18ஆம் திகதி இரவு கடலுக்கு கடற்றொழிலுக்காக சென்ற நபர் உயிரிழந்துள்ளதாக அவரின்  உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

கண்ணீர் அஞ்சலி 

குறித்த நபர், கரை திரும்பாத நிலையில் இரண்டு நாட்கள் கடற்றொழிலுக்காக கடலில் தேடுதல்
நடத்தியும் அவர் கிடைக்காத நிலையில் குறித்த நபர் இறந்திருப்பதாக
உறவினர்கள் அறிவித்து கண்ணீர் அஞ்சலி செய்வதற்கான ஏற்பாட்டினை செய்துள்ளார்கள். 

62 வயதுடைய வின்சன்ரிப்போல் அன்ரனி கர்னல் என்ற 8 பிள்ளைகளின் தந்தையே
இவ்வாறு காணாமல் போயுள்ளார். இவரின் இறுதி நிகழ்விற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் மேற்கொண்டுள்ளார்கள்.

அதேவேளை, குறித்த கடற்றொழிலாளர் காணாமல் போனமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version