Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் ஒன்று திரளவுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

கிளிநொச்சியில் ஒன்று திரளவுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

0

எதிர்வரும் ஆகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில்
மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி கனகரஞ்சி மற்றும்
செயலாளர் லீலாதேவி ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர். 

இதேவேளை ஏனைய
மாவட்டங்களான திருகோணமலை மற்றும் யாழில் நடைபெறும் போராட்டங்களிலும் பங்கேற்குமாறு
அழைப்பு விடுத்துள்ளனர். 

2017ஆம் ஆண்டில் இருந்து தமது உறவுகளுக்காக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதி கோரி போராடி வருகின்றனர். இன்று வரை எந்தவொரு தீர்வும் பெற்றிராத நிலையில் அவர்களின் உணர்வுபூர்வமான போராட்டங்களும் கோரிக்கைகளும் ஓயாநிலையில் தான் இருக்கின்றன.

அந்தவகையில், புலம்பெயர் தேசங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டங்களில்
அந்தந்த நாடுகளில் வலுச்சேர்த்து
அழுத்தம் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகின்றது பின்வரும் காணொளி,

NO COMMENTS

Exit mobile version