Home இலங்கை அரசியல் தலதா அதுகோரளவின் வெற்றிடத்திற்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

தலதா அதுகோரளவின் வெற்றிடத்திற்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

0

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்  தலதா அதுகோரளவின் வெற்றிடத்திற்கு கருணாரத்ன பரணவிதாரனவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரள தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு கருணாரத்ன பரணவிதாரனவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல்

கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தலதா அதுகோரளவிற்கு அடுத்தபடியாக ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கருணாரட்ன பரணவிதாரன 36787 வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தார்.

இதன் அடிப்படையில் கருணாரட்னவின் பெயரை தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version