பொருளாதார நெருக்கடி காலத்தில் அதிகரிக்கப்பட்ட விலையுடன் ஒப்பிடும் போது தற்போதைய விலைக்குறைப்பு போதுமானதாக இல்லை என அகில இலங்கை (Sri Lanka) தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
கையடக்கத் தொலைபேசி
கையடக்கத் தொலைபேசிகளின் விலை 300 முதல் 400 சதவீதம் வரை அதிகரித்துள்ள நிலையில் 30 முதல் 35 சதவீதம் வரையே குறைந்துள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், விலை கட்டுப்படியாகவில்லையெனவும் அத்தோடு கையடக்கத் தொலைபேசிகளை அத்தியாவசிய பொருட்களாக அறிவிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.