Home இலங்கை சமூகம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பொதிகள்: சந்தேகநபர் தப்பியோட்டம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பொதிகள்: சந்தேகநபர் தப்பியோட்டம்

0

கட்டுநாயக்க விமான நிலைத்தில் இரண்டு பயணப்பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பயணப்பொதிகள் இன்று (25) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, பயணப்பொதியிலிருந்து , 03 கோடி ரூபா பெறுமதியான 228 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் டெப் கணினிகள் மீட்கப்பட்டுள்ளன.

விசாரணை

துபாயிலிருந்து இன்றைய தினம் அதிகாலை 05.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நபரொருவர் இந்த இரண்டு பயணப்பொதிகளையும் விமான நிலைத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இது தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version