Home இலங்கை அரசியல் மோடி – ரணில் இரகசிய உறவை தகர்த்த முக்கிய சக்தி

மோடி – ரணில் இரகசிய உறவை தகர்த்த முக்கிய சக்தி

0

அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) பதவியேற்றதும் இலங்கை- இந்திய உறவில் விரிசல் ஏற்படக்கூடிய மாதிரியான சூழ்நிலையில் அடுத்த மாதம் இந்திய பிரதமர் மோடி(Narendra Modi) இலங்கை வருகின்றார்.

மோடியின் இலங்கை விஜயத்திற்கு மேற்குலகால் அல்லத அமெரிக்காவினால் இந்தியாவிற்கு வைக்கப்பட்ட அதிர்ச்சி வைத்தியமாக ரணில் மீதான நடவடிக்கையை பார்க்க கூடியதாக உள்ளது.

இந்தநிலையில், மோடி ரணிலை எவ்வளவு முக்கியமான இராஜதந்திரியாக தனது எக்ஸ் தளத்தில் எழுதினாரோ அந்த ஒரு வாரத்திற்குள் அல்ஜஹீரா அவரை பூச்சியமாக்கி விட்டது என்று இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.

சிங்கள மக்களால் ரணில் தூக்கியெறிப்பட்டார் என்பது அல்ஜஹீரா ஊடகத்தின் முதல் கேள்வியிலே தெரிந்துவிட்டது என்றார்.

ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு…. 

NO COMMENTS

Exit mobile version