Home முக்கியச் செய்திகள் மோடியின் வருகை – கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!!

மோடியின் வருகை – கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!!

0

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (04) இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) தற்போது ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து இந்தியப் பிரதமரின் சிறப்பு விமானம் வருகைத்தரவுள்ளதால், விமான நிலையத்திற்கு வரும் மற்றும் புறப்படும் விமானங்களின் அட்டவணையில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு, இலங்கைக்குள் அவரது பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக ஒரு சிறப்பு ‘லிமோசின்’ வகை VIP பாதுகாப்பு கார், அதே போல் வாகனத் தொடரணிக்கு பாதுகாப்பை வழங்க பாதுகாப்பு துணை வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்திய பாதுகாப்பு

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான உழுக்குவானூர்தி குழுவும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான இந்திய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வீதிகள் முடக்கம்

விமான நிலையத்திலிருந்து கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை வரையிலான வீதிகள் இலங்கை மற்றும் இந்திய தேசியக் கொடிகளுடன் இந்தியப் பிரதமரின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், இந்தியப் பிரதமரும் அவரது குழுவினரும் பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு வரும் மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை அவ்வப்போது மூடவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

https://www.youtube.com/embed/JXCHNQ8pORA

NO COMMENTS

Exit mobile version