Home முக்கியச் செய்திகள் இந்தியாவை வம்புக்கு இழுக்கும் டிரம்ப் – மீண்டும் சர்ச்சை பேச்சு

இந்தியாவை வம்புக்கு இழுக்கும் டிரம்ப் – மீண்டும் சர்ச்சை பேச்சு

0

புதிய இணைப்பு

“இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியது நான்தான்” என அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

கட்டாரில் அமெரிக்க இராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய போதே ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்

இரண்டாம் இணைப்பு

இந்தியா (India) – பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளதற்கு இந்தியா உத்தியோகபூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தை இன்று இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தெரிவித்துள்ளார்.

“ஒபரேஷன் சிந்தூர் தொடங்கியதில் இருந்து இந்தியாவின் இராணுவ நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க மற்றும் இந்திய தலைவர்கள் இடையே அவ்வப்போது உரையாடல் நடந்தது. ஆனால் அவற்றில் வர்த்தகம் தொடர்பான பேச்சே எழவில்லை” என்று தெரிவித்தார். 

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றத்தையும் அணு ஆயுதப் போர் நடக்கவிருந்ததையும் அமெரிக்கா தலையிட்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மறுநாள், பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அதிகாலை பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்திற்குச் சென்று அங்குள்ள வீரர்களுடன் கலந்துரையாடினார். 

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் உள்ள இந்திய விமானப்படை வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் தற்போதைய ஒபரேஷன் சிந்தூர் கள நிலைமை குறித்து விளக்கமளித்துள்ளர்.

https://www.youtube.com/embed/NcU4SM279JU

NO COMMENTS

Exit mobile version