Home முக்கியச் செய்திகள் 3 வருடங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகல்

3 வருடங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகல்

0

கற்றல் நடவடிக்கைகளில் இருந்து கடந்த மூன்று வருடங்களில் 20 ஆயிரம் மாணவர்கள் இடை விலகினர் என்று கல்வி உயர்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

புதிய கல்வி மறுசீரமைப்பு யோசனைகள் தொடர்பாக அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம்  ஒன்று குருநாகலில் நடைபெற்றது.

இதில் கருத்து வெளியிட்ட போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய மேற்கண்டவாறு கூறினார்.

புதிய பாட விதானங்கள்

மேலும், நாளாந்தம் பாடசாலை நேரத்தில் 50 வீத மாணவர்களே வகுப்பறையில் இருக்கின்றனர். 

அடுத்த வருடத்தில் தரம் ஒன்றுக்கு தரம் 6 இற்கும் புதிய பாட விதானங்களை அறிமுகப்படுத்தப்படும். 

இதன்மூலம் புதிய இலக்களை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது என ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version