இலங்கையில் (Sri Lanka) வைத்தியர்களின் பட்டப்படிப்புக்கான நிறுவனங்களை அதிகரிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எனது திட்டம் இலங்கையின் சுகாதார சேவையின் பாதுகாப்பையும் வைத்திய தொழிலளார்களின் எதிர்காலத்தையும் உறுதிப்படுத்தும்.
பட்டப்படிப்பு
அரச ஊழியர்களின் சம்பளத்தை 24% – 50% வரையில் அதிகரிக்கவும் வாழ்வாதார கொடுப்பனவுகளை 25,000 வரையில் அதிகரிக்கவும் தீர்மானித்துள்ளோம்.
மிகச்சிறந்த வைத்திய மற்றும் சுகாதார சேவைக் கட்டமைப்பை உறுதிப்படுத்தல் மற்றும் புதிய வைத்தியசாலைகளை நிர்மாணிக்கப்படும்.
நமது வைத்தியசாலைகளை செயற்திறன் மிக்கதாக்கும் வசதிகளை ஏற்படுத்துவோம்.
அரச ஊழியர்களுக்கு சிறந்த சம்பளத்தையும் மக்களுக்கு சிறந்த அசர சேவையினையும் உறுதிப்படுத்துவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.