Home சினிமா பத்திரிகையாளர்களை விரட்டி விரட்டி தாக்கிய நடிகர் மோகன் பாபு! அதிர்ச்சி வீடியோ

பத்திரிகையாளர்களை விரட்டி விரட்டி தாக்கிய நடிகர் மோகன் பாபு! அதிர்ச்சி வீடியோ

0

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர் மோகன் பாபு. அவருக்கு விஷ்ணு மஞ்சு, மஞ்சு மனோஜ் என இரண்டு மகன்களும், லட்சுமி மஞ்சு என்ற மகளும் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் சினிமா துறையில் தான் இருக்கின்றனர்.

நடிகர் மோகன் பாபு தான் சினிமாவில் சம்பாதித்த பணத்தை கொண்டு ஆந்திராவில் பல இடங்களில் சொத்துக்கள் வாங்கி வைத்திருக்கிறார். திருப்பதியில் மோகன் பாபுவுக்கு சொந்தமாக யூனிவர்சிட்டியும் இருக்கிறது.

சொத்து தகராறு

தற்போது மோகன் பாபு மற்றும் அவரது மகன் மஞ்சு மனோஜ் ஆகியோர் இடையே சொத்து தகராறு இருந்து வருகிறது.

மகன், மருமகள் தனது வீட்டில் அனுமதி இன்று நுழைந்து ஆக்ரமித்து கொண்டதாக மோகன் பாபு இன்று போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்.

பத்திரிகையாளர் மீது தாக்குதல்

இந்நிலையில் நடிகர் மோகன் வீட்டுக்கு பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரிக்க சென்று இருக்கின்றனர்.

அப்போது அவர்களை மோகன் பாபு விரட்டி விரட்டி தாக்கி இருக்கிறார். அவர் மைக்கை பிடிங்கி அடித்து பத்ரிக்கையாளர்களை தாக்கி இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மோகன் பாபு செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version