Home இலங்கை சமூகம் வெளிநாட்டு மோகம் காட்டி பண மோசடி: சந்தேகநபர் கைது!

வெளிநாட்டு மோகம் காட்டி பண மோசடி: சந்தேகநபர் கைது!

0

வெளிநாட்டு வேலைகளை வாங்கித் தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர், கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு 15 ஐச் சேர்ந்த 41 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

கொரியாவில் வேலைகளை வாங்கித் தருவதாகக் கூறி சந்தேக நபர் 150 பேரிடம் இருந்து ரூ. 150 மில்லியனுக்கும் அதிகமாக மோசடி செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணை

குறித்த நபரிடமிருந்து ஒரு ஜீப், ஒரு காணிக்கான சட்ட உரிமம் மற்றும் இரண்டு தொலைப்பேசிகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. 

NO COMMENTS

Exit mobile version