ராகமை பிரதேசத்தில் 43 வயதுடைய பிக்கு ஒருவர் நேற்று (10) களனி காவல் பிரிவின் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட, சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட ஆடம்பர வாகனத்தைப் பயன்படுத்தியதாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
வாகனம் பிக்குவுக்கு எவ்வாறு கிடைத்தது
குறித்த வாகனம் தற்போது காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அதன் பதிவு தகடு போலியானது என விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வாகனம் பிக்குவுக்கு எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து காவல்துறையினர் தற்போது விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
