சிறுவயது பிக்கு ஒருவரை வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பௌத்த பிக்கு ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஏழு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
மேலும் நீதிமன்றம் குற்றவாளிக்கு ரூ.4500 அபராதமும் பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 100,000 இழப்பீடும் வழங்க உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பு
கொழும்பு(colombo) மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் நேற்று (30) இந்த தீர்ப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது .
இலங்கையில்(sri lanka) சிறுவயது பிக்குகள் மீதான துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதும் பெருமளவில் அவை வெளியில் தெரிய வருவதில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக கிராமப்புறங்களில் இருந்து பிக்குகளாக சேரும் சிறுவர்களை இலக்குவைத்தே இந்த கொடுமை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தமிழ் மக்களின் காணிகளை அடாத்தாக பிடிக்கும் செயற்பாடுகளிலும் பிக்குகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.