Home இலங்கை சமூகம் கிளிநொச்சியை வந்தடைந்த ஐந்து நாடுகளின் பெளத்த தேரர்கள்

கிளிநொச்சியை வந்தடைந்த ஐந்து நாடுகளின் பெளத்த தேரர்கள்

0

Courtesy: Thevanathan

உலக சுகந்திரம் வேண்டி திஸ்ஸமகாராம(அம்பாந்தோட்டை) முதல் நாகதீபம்
(நயினாதீவு) வரை இலங்கை உட்பட ஐந்து நாடுகளின் பெளத்த தேரர்கள்
முன்னெடுத்துள்ள பாதயாத்திரை நேற்று(03.03.2025) கிளிநொச்சியை வந்தடைந்தது.

கிளிநொச்சியை
வந்தடைந்த தேரர்களை யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவர்கள்
வரவேற்றனர். வீதியிலிருந்து பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சரசவி விகாரை வரை
மாணவர்கள், விரிவுரையாளர்கள் வரவேற்றனர்.

அவர்கள், இன்றையதினம்(04) கிளிநொச்சியிலிருந்து
யாழ்ப்பாணம் நோக்கி தமது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளனர்.

பாதயாத்திரை

தாய்லாந்து, மியன்மார்,
இலங்கை, லாகோஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 50 தேரர்கள் குறித்த பாத யாத்திரையில்
கலந்து கொண்டுள்ளனர்.

பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி குறித்த பாதயாத்திரையை
ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version