Home இலங்கை பொருளாதாரம் பெப்ரவரியில் குறைவடைந்த தனி நபரின் மாதாந்த செலவு: வெளியானது புள்ளி விபரம்

பெப்ரவரியில் குறைவடைந்த தனி நபரின் மாதாந்த செலவு: வெளியானது புள்ளி விபரம்

0

நாட்டில் ஒரு நபரின் மாதாந்த செலவு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் உள்ள ஒருவருக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்தம் குறைந்தபட்சம் 16,975 ரூபாய் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கான அதிகாரபூர்வ வறுமைக் கோடு அட்டவணையை திணைக்களம் வெளியிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை : சஜித்,அநுரவின் திட்டத்தை அம்பலப்படுத்திய கர்தினால்

நாட்டின் பணவீக்கம்

அதன்படி இந்த ஆண்டு பெப்ரவரியில், தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, நாட்டின் பணவீக்கம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது.

இவையே வறுமைக் கோடு குறைவதற்கான முக்கியக் காரணங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் வாழும் ஒருவருக்கு குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்தம் 18,308 ரூபா தேவைப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அதிகரித்த வெப்பநிலை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.

NO COMMENTS

Exit mobile version