Home இலங்கை சமூகம் மகிந்தவின் ஆட்சியே கிழக்குக்கு அதிக அபிவிருத்தியை பெற்றுதந்தது: நாமல் விளக்கம்

மகிந்தவின் ஆட்சியே கிழக்குக்கு அதிக அபிவிருத்தியை பெற்றுதந்தது: நாமல் விளக்கம்

0

எமது ஆட்சி காலத்திலேயே, கிழக்கு மாகாணத்துக்கு பல்வேறு அபிவிருத்திகளை செய்து
காட்டியுள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தற்போது அனைத்து அபிவிருத்திகளும் இங்கு தடைபட்டுள்ளன என்றும், விசேடமாக
திருகோணமலை மாவட்டத்திற்கு பாரிய அபிவிருத்தி திட்டங்களை செய்துள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

 அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

எதிர்கால ஆட்சி

எமது எதிர்கால ஆட்சியில், இந்த மாவட்டத்தின் அபிவிருத்திக்கு, முன்னுரிமை
வழங்குவோம்.

திருகோணமலை
மாவட்டம் அதி உச்ச அபிவிருத்திகளை மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்திலேயே அடைந்தது.
இதனை யாரும் மறுக்க முடியாது.

கிராமங்களை அபிவிருத்தி செய்கின்ற ஒரு தேர்தலை நாங்கள் எதிர்நோக்கி
இருக்கின்றோம்” என கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version