பிரித்தானியாவில் தற்போது கலவரங்களில் ஈடுபட்டவர்களை சிசிரிவி காணொளிகளின் ஊடாக அடையாளம் கண்டு அவர்களை வீடு வீடாக சென்று கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரித்தானியாவின் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் நூறுக்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் மேற்கொள்ளப்போவதாக வாட்சப் குழு மூலம் 13,000க்கும் அதிகமானவர்கள் மேற்கொண்ட கலந்துரையாடலை பொலிஸார் அறிந்து கொண்டமையினால் பாரிய அழிவு தடுக்கப்பட்டதாக ஆய்வாளர் கலாநிதி அரூஸ் குறிப்பிட்டுள்ளார்.
இப்பொழுது, பிரித்தானிய பொலிஸார் கலவரங்களை தொடர்ந்து சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளனர் என ஆய்வாளர் கூறியுள்ளார்..
அத்துடன், கலவரங்களில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டணை வழங்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரித்தானியாவில் இடம்பெறும் திட்டமிடப்பட்ட சதிகள் தொடர்பில் ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு,