Home இலங்கை சமூகம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் பதிவான ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் பதிவான ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

0

ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 31ஆம் திகதி வரை 1,267 முறைப்பாடுகள் தமக்கு கிடைத்துள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட 24 சோதனை நடவடிக்கைகளில் சந்தேகநபர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கைதான சந்தேகநபர்கள்

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 6 பேர் பொலிஸ் அதிகாரிகள் என்றும், அவர்களில் ஒரு அதிபர், தொழில் அமைச்சின் அதிகாரி, ஒரு கள அதிகாரி மற்றும் ஒரு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரி ஆகியோரும் உள்ளடங்குவதாக தெரியவருகிறது.

இதற்கு மேலதிகமாக பொது சுகாதார பரிசோதகர், அபிவிருத்தி உத்தியோகத்தர், நீதி அமைச்சில் பணியாற்றும் ஊழியர், இறைவரித் திணைக்கள மதிப்பீட்டு அதிகாரி ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வருடத்தில் மாத்திரம் 24 பேருக்கு எதிராக நீதிமன்றங்களில் 21 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version