Home முக்கியச் செய்திகள் யாழில் 21 வருடங்களின் பின் 3 குழந்தைகளை பிரசவித்த தாய் உயிரிழப்பு!

யாழில் 21 வருடங்களின் பின் 3 குழந்தைகளை பிரசவித்த தாய் உயிரிழப்பு!

0

யாழில் 21 வருடமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த குடும்பப்பெண், 3 குழந்தைகளை பிரசவித்த நிலையில் நேற்று(07) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

கரவெட்டி பகுதியைச் சேர்ந்த யோகராசா மயூரதி (வயது 45) என்ற தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண் 21 வருடங்களாக குழந்தைப் பாக்கியம் இல்லாமல் பல்வேறு சிகிச்சைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

உடற்கூற்று பரிசோதனை அறிக்கை

இந்த நிலையில் கடந்த ஐப்பசி மாதம் 7ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மூன்று குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

குழந்தையை பிரசவித்த பின்னரான 32 நாட்களில் இரண்டு நாட்கள் கண் விழித்து பார்த்த நிலையில் ஏனைய அனைத்து நாட்களும் மயக்க நிலையில் இருந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவர் சிகிச்சை பெற்று வந்த காலப்பகுதியில் குடல் மற்றும் ஈரல் ஆகிய பகுதிகளில் கிருமித்தொற்று இருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், உடற்கூற்று பரிசோதனை அறிக்கை இதுவரை வெளிவரவில்லை.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version