Home முக்கியச் செய்திகள் இரண்டு பனடோல் அட்டைகளை நிவாரண உதவியாக வழங்கிய தாய்

இரண்டு பனடோல் அட்டைகளை நிவாரண உதவியாக வழங்கிய தாய்

0

இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தம்மால் இயன்ற உதவிகளை வழங்கி வருகின்றனர்.

வறுமையின் பிடியில் வாழும்  தாய்

இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக வெலிகமயில் நன்கொடைகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அங்கு வந்த ஒரு தாய் 2 பனடோல் அட்டைகளை நன்கொடையாக வழங்கியுள்ளார்.  

வறுமையின் பிடியில் வாழும் அந்த தாய் தன்னால் இயன்ற அந்த உதவியை வழங்கியுள்ளமை அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version