சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு (Deshabandu Tennakoon) எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (25) பிற்பகல் 12.15 மணிக்கு நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு்ள்ளது.
இந்நிலையில், வெலிகம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிடியானை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 20 நாட்களுக்குப் பிறகு நீதிமன்றத்தில் தேசபந்து தென்னகோன் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.
