Home முக்கியச் செய்திகள் சிறை உணவை தவிர்த்த தேசபந்துவுக்கு கிடைத்த சலுகை

சிறை உணவை தவிர்த்த தேசபந்துவுக்கு கிடைத்த சலுகை

0

சிறையிலுள்ள காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு (Deshabandu Tennakoon) வீட்டில் இருந்து உணவு பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நேற்று (24) முதல் வீட்டில் இருந்து உணவு பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப்பேச்சாளரும் , சிறைச்சாலை ஆணையாளருமான காமினி பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மாத்தறை (Matara) – வெலிகம பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோ கைது செய்யப்பட்டார்.

சிறைச்சாலைகள் திணைக்களம்

பின்னர், தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னர் முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் வீட்டிலிருந்து உணவு பெறுவதற்கான கோரிக்கை சிறைச்சாலை திணைக்களத்திடம் முன்னைத்திருந்தார்.

இந்நிலையில், இந்த கோரிக்கையை பரிசீலித்த சிறைச்சாலைகள் திணைக்களம் வீட்டில் இருந்து உணவு பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version