மோட்டார் வாகன இறக்குமதியை எளிதாக்குவதற்கு, நாட்டின் அந்நியச் செலாவணி
இருப்பு, பயன்படுத்தப்படுவதில்லை என்று முன்னணி பொருளாதார நிபுணர் தனநாத்
பெர்னாண்டோ கூறியுள்ளார்.
நாட்டுக்கு எந்தவொரு பொருட்களையும் இறக்குமதி செய்யும் போது, வெளிநாட்டு
இருப்புக்கள் பயன்படுத்தப்படுவதில்லை, அதற்கு பதிலாக ஏற்றுமதிகள் மூலம்
ஈட்டப்படும் பணமே பயன்படுத்தப்படுகின்றன என்று பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 6.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள்
ஊடக சந்திப்பு ஒன்றில் பேசிய அவர், இருப்புகளைப் பயன்படுத்தி இறக்குமதிகள்
செய்யப்பட்டால், இலங்கையின் இருப்பு அளவு ஒருபோதும் போதுமானதாக இருக்காது
என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் இருப்புக்கள் சுமார் 6.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும்,
ஆனால் இலங்கை ஆண்டுதோறும் 20 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் மதிப்புள்ள
பொருட்களை இறக்குமதி செய்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே, இறக்குமதிகளை இருப்புக்கள் மூலம் மேற்கொள்ள முடியாது என்று தனநாத்
பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில் தேவைப்பட்டால், இருப்புக்கள் மூலம் இறக்குமதிகளை
மேற்கொள்ளமுடியும் என்றும் பொருளாதார நிபுணர் தனநாத் பெர்னாண்டோ
தெரிவித்துள்ளார்.
