Home இலங்கை அரசியல் யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞனின் கால் பாதம் துண்டிப்பு

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞனின் கால் பாதம் துண்டிப்பு

0

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில்கால் பாதம் துண்டாடப்பட்டு ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் பகுதியில் இன்று (10.09.2024) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில், மோட்டார் சைக்கிள் சாரதியின் கால், மோட்டார் சைக்கிளின் செயினுக்குள் அகப்பட்டு, பாதம் துண்டாடப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி

விபத்தினை அடுத்து காயப்பட்டவரை அவ்விடத்தில் இருந்தவர்கள் மீட்டு நோயாளர் காவு வண்டியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், விபத்து சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 24

Source: https://tamilwin.com/article/motorcycle-accident-in-jaffna-1725964145

NO COMMENTS

Exit mobile version